டெல்லி:

ல்விக் கடன் வழங்கப்பட்டதில், இடஒதுக்கீடு முறை புறக்கணிக்கப்பட்டு, சமுக நீதியை குழியும் போட்டு புதைக்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருவது, நாடாளுமன்றத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள அறிக்கையின் மூலம் வெட்ட  வெளிச்சமாகி உள்ளது.

மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவை கேள்வி நேரத்தின்போது,  மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன், மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் (Ramesh Pokhriyal) எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அதில்,  2016-17 ஆம் ஆண்டில் கல்விக்கடனாக ரூ. 7.5 லட்சம் கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதில், பொதுப் பிரிவினருக்கு 70% – இதர பிரிவினருக்கு வெறும் 30% கொடுத்து உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் கல்விக் கடன் உத்திரவாத நிதி திட்டத்தின் கீழ் கடந்த 2016 17 முதல் தற்போது வரை 4.1 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழங்கப்பட்ட தரவு கல்வி கடன்களுக்கான கடன் உத்தரவாத நிதி திட்டத்தில் (சிஜிஎஃப்எஸ்இஎல்) இருந்தது, இதன் மூலம் வங்கிகள் தேசிய கடன் உத்தரவாதத்துடன் (என்சிஜிடிசி) எந்தவொரு பிணையுமின்றி ரூ.5 லட்சம் முதல்  7.5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்ட கடன்களுக்கு ஜாமீன் பெற முடியும்.

2016-17 நிதியாண்டில் இருந்து இப்போது வரை கிடைத்த தரவுகளின்படி, இத்திட்டத்தின் கீழ் 4.1 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 67% பேர் பொது வகையைச் சேர்ந்தவர்கள் (ஜி.சி). 23% மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் (ஓபிசி), 7% பட்டியல் சாதியினர் (எஸ்சி) மற்றும் 3% பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி). என்பதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

 முக்கியமாக, ஜி.சி மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடனின் அளவு மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக உள்ளது. 

உதாரணமாக, 67% மாணவர்கள் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் CGFSEL இன் கீழ் உள்ள மொத்த,  13,797 கோடி கடன் தொகையில் 70% ஐப் பெற்றுள்ளனர்.

ஒரு ஜி.சி மாணவருக்கு திட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சராசரி கடன் தொகை சுமார் 3.54 லட்சம்.

இதற்கு மாறாக, மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, முறையே ஓபிசி, எஸ்சி  மற்றும் எஸ்டி மாணவர்களின் அளவு ரூ. 2.91 லட்சம், ரூ. 3.24 லட்சம், மற்றும்  ரூ. 3.17 லட்சம்.

அதாவது, பொதுவகுப்பினர் (GC) 2,75,028 பேர் பயன் அடைந்துள்ளதாகவும், ஓபிசி பிரிவினர் 94,348 பேரும், எஸ்சி பிரிவினர் 28,614 பேரும், எஸ்டி பிரிவினர் 12,343 பேரும் ஆக மொத்தம் 4,10,333 பேர் பயன் அடைந்து உள்ளதாக தெரிவித்து உள்ளது. 

இந்த தரவுகளின் அடிப்படையை வைத்து பார்க்கும்போது, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு  (மத்தியஅரசின் தரவுகளின் படி ஓபிசி பிரிவு) சுமார்  19.9% மட்டுமே கடன் மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

மத்திய அரசு வழங்கும் கல்விக்கடன் குறித் இந்த திட்டம் எந்தவித பிணையுமின்றி வழங்கப்படுவ தாகவும், இதற்காக நாடு முழுவதும் 29 வங்கிகள் பதிவு செய்துள்ளதாகவும், பெரும்பான்மை யானவை  அரசு பொதுத்துறை வங்கிகள்தனியார் வங்கிகள் இதில் இடம்பெறவில்லை என்பதும் தரவுகளில் மத்தியஅரசு தாக்கல் செய்துள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த கல்விக்கடன் வழங்குவதில், இவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏழை மற்றும் பட்டியலின் மக்களுக்கு பட்டப் படிப்பு என்பதுகாணல் நீராக இருந்து வந்த நிலையில்,  கடந்த சில ஆண்டுகளாகத்தான்  அனைத்து தரப்பு மக்களும் கல்வியில் உயர வேண்டும் என்று கருதி, வங்கிக் கடன்கள் பெறுவதை எளிதாக்கி  காங்கிரஸ் தலைமையிலான மத்தியஅரசு ஊக்குவித்து வந்தது.

அதன்பிறகே ஏராளமானோர் கல்விக்கடன் பெற்று, சமூகத்தில் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள தரவு பாஜக அரசு, சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்கூடாக தெரிய வந்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியாக உள்ள வகுப்பினர்களுக்கு  கல்விக்கடன் வழங்கப்படுவதில் புறக்கணிக்கப்பட்டுள்ளது நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் சாதி வேறுபாடின்றி கடன் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சமூக நீதியை காப்பாற்றுவதாக மார்த்தட்டிக்கொள்ளும் மத்திய பாஜக அரசு, ஏற்கனவே நீட் தேர்வு, உயர்ஜாதியினருக்கும் 10சதவிகித இடஒதுக்கீடு, சிறுவகுப்புக்கு பொதுத்தேர்வு என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, அடித்தட்டு மக்களை உயரவிடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள கல்விக்கடன் தொடர்பான தரவுகள், பாஜக அரசு சமூக விரோத அரசு என்பதை கோடிட்டு காட்டியுள்ளது.