வாட்ஸ் அப் தகவல் திருட்டு தொடர்பாக இஸ்ரேல் நிறுவனத்துக்கு நோட்டீஸ்! மத்தியஅமைச்சர் தகவல்

டெல்லி:

வாட்ஸ் அப் தகவல் திருட்டு தொடர்பாக இஸ்ரேல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி 20 நாடுகளில் உள்ள சமூக சேவகர்கள் மற்றும் பத்திரிக்கை யாளர்கள் உட்பட 1400 பேரை உளவு பார்த்த இஸ்ரேலைச் சேர்ந்த பிகாசஸ் என்ற  நிறுவனம் மீது வாட்ஸ்அப் நிறுவனம் அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மகாணத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கின் விசாரணையின்போது, இந்தியாவில் பிரியங்கா காந்தி உள்பட எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர் என 121 பேரின்  தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தவிவகாரம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்துபேசிய மத்திய அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம்கடந்த ஜூலை, செப்டம்பர் மாதத்தில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில்கேத்கார்ட் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். வேவு பார்க்கப்பட்ட மென்பொருள் தொடர்பாக அந்த நிறுவனம் பதில் அளிக்கவில்லை எனவும் இருப்பினும் இந்த விவகாரம் குறித்து அவசரகால அடிப்படையில் வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம் கோரியது. அதோடு வாட்ஸ் அப் அம்சங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது.

பெகாசஸ் உளவு மென்பொருள் இந்த நிலையில், இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் இந்தியா்களின் விவரங்கள் வேவுபார்க்கபட்டதாக தகவல்கள் வலம் வந்தது. இதையடுத்து பெகாசஸ் மென்பொருள் மற்றும் அதன் விவரங்களைக் கேட்டு, என்எஸ்ஓ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடவடிக்கைஇணைய தளங்களில் தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தகவல் திருட்டு தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தனிநபர் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது அதை உறுதி செய்வதில் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி