டில்லி:

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் உடனே இணையதளத்தில்இருந்து நீக்க வேண்டும் என்று யுடியூப் வீடியோ  வலைதள நிறுவனத்துக்கு மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா. இதன் காரண மாக சில நாட்களாக இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானி அபிநந்தனின் விமானமும் தாக்குதலுக்கு உள்ளானது. இதன் காரணமாக அதிலிருந்து குதித்த அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர்.

அதை இறுதி செய்யும் வகையில் அபிந்தன் காயத்துடன் காணப்படுவது மற்றும் அவரது கண்களை கட்டி அவரிடம் விசாரணை நடத்துவது போன்ற  வீடியோக்களையும் வெளியிட்டது.  இந்த வீடியோ உலகம் முழுவதிலும் சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் வைரலாக பரவியது.

இந்த நிலையில்,  இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை உடனே நீக்க வேண்டும் என்று  யுடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது