தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியது மத்தியஅரசு

 

 

 

 

 

 

 

சென்னை,

மிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கி உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு

அரசு கேபிள் டிவி நிறுவனம் என்ற தமிழக அரசு நிறுவனம்  04.010.2007 அன்று கருணாநிதி ஆட்சியின் போது  தொடங்கப்பட்டது. குறைந்த விலையில் சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினாலும், லோக்கல் கேபிள் டிவி நிறுவனத்தினரின் முறைகேடு காரணமாகவும் பல இடங்களில் செயலிழந்து காணப்பட்டது.

பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு, ரூ.3 கோடி நிதியுதவி கடனாக வழங்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என மாற்றம் செய்யப்பட்டது

தமிழகத்தின் 27 மாவட்ட தலைநகரங்களில் விருப்பமுள்ள தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் குத்தகைக்கு எடுத்ததுடன், ஏற்கனவே 4 மாவட்டங்களில் இருந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறைகளை புனரமைத்தது ஒளிபரப்பு தொடங்கியது.

இதற்கு,  த‘மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சென்னை மாநகரத்தின் கட்டுப்பாட்டுடன் சேனல்களை வழங்கும் அமைப்பு (Conditional Access System – CAS) பகுதி மக்களுக்கு பன்முனை அமைப்பு ஆப்பரேட்டர் (Multi System Operator – MSO) உரிமம் வழங்கியது.

மத்திய அரசின் கேபிள் டிவி நெட்வொர்க் திருத்தச் சட்டம் 2011-ன்படி நாடு முழுவதும் 31.12.2014க்குள் கேபிள் டிவி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்.

ஆனால், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான, (Digital Access System – DAS) பகுதிகளுக்கான பன்முனை அமைப்பு ஆப்பரேட்டர் (MSO) உரிமம் வழங்கக் கோரி 05.07.2012 அன்று மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்து இருந்தது.

ஆனால், மத்திய அரசின் தொலைதொடர்பு ஆணையம் இதற்கு அனுமதி வழங்க காலம் தாழ்த்தி வந்தது.

இதன் காரணமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பலமுறை மத்திய அரசை வலியுறுத்தி னார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கடந்த மாதம் டில்லி சென்றபோது பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியது உத்தரவிட்டுள்ளது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்.

டிஜிட்டல் உரிமம் வழங்கியதற்கான ஆணையை நேற்று வெளியிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.