ஓட்டுக்குப்பணம் கொடுத்தால் வேட்பாளர் தகுதி நீக்கம் இல்லை! மத்தியஅரசு

டில்லி,

ட்டுப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

வாக்காளர்களுக்கு ஓட்டு போட பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.

தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது  வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது உறுதியானதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இது அரசியல் கட்சியினரிடையே சர்ச்சையை உருவாக்கியது.. நாடுமுழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரமும் அதிகரித்து விட்டது. இதனை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளை கடுமையாக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தை அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாதவாறு சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

ஓட்டுக்குப்பணம் கொடுத்தால் வேட்பாளர் தகுதி நீக்கம் இல்லை. என்றும், குற்றச்சாட்டு பதிவு மட்டுமே  தகுதி நீக்கத்திற்கு போதுமானதல்ல என்று கூறியுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரணமாக சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட தினகரன் தப்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது