‘ஜன் அவுஷதி’: மலிவுவிலை மருந்தகம் தொடங்க மத்திய அரசு ரூ.2.5 லட்சம் மானியம்
டில்லி:
மத்தியில் பாரதியஜனதா அரசு பொறுப்பேற்றதும், குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும் வகையில் ஜன்அவுஷதி என்ற மலிவு விலை மருந்தகம் ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைக்காத நிலையில், தற்போது இந்த மருந்தகம் தொடங்குபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் கற்பனைக்கு எட்டாத விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் ஏழை எளிய மக்களுக்குக்கு குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும், ‘ஜன் அவுஷதி’எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்து வருகிறது.
ஏழை நோயாளிகள் பயன் பெறும் வகையில் அரசு மருந்தகங் கள் மற்றும் மருத்துவமனைகளில் ஜெனரிக் எனப்படும், விலை குறைந்த அதே நேரம், அனைத்து மூலக்கூறு மருந்துகள் அடங்கிய மருந்துகளே விற்பனை செய்யப் படுகின்றன.
மருத்துவர்களும், மலிவு வலை யிலான ஜெனரிக் மருத்துகளையே நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், எந்தவொரு மருத்துவர்களும் ஜெனரிங் மருந்துகளை பரிந்துரைப்ப தில்லை. தனியார் மருந்து நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு, விலை உயர்ந்த மருந்துகளையே பரிந் துரைக்கின்றனர்.
இதுகுறித்து பல்வேறு புகார்கள் இந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு வந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் எச்சரிக்கை விடுத்தது.
ஏழை, நடுத்தர நோயாளிகள் மருந்து, மாத்திரை களுக்காக செலவிடும் தொகை அதிகமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் ஜெனரிக் மருந்துகளைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் மருத்துவக் கவுன்சில் தலைவர்கள், அனைத்து மருத்துவ மனைகளின் தலைவர்கள், மருத்துவக் கல்லூரி களின் முதல்வர்கள், டீன்கள் உள் ளிட்டோருக்கு இந்திய மருத்துவ கவுன்சில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிது. அதில், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், அதன் விதிமுறைகளைக் கண்டிப் பாகக் கடைபிடிக்க வேண்டும். நோயாளி களுக்குப் பிராண்டட் மருந்துகளுக்குப் பதிலாக மலிவு விலையிலான ஜெனரிக் மருந்துகளையே பரி்ந்துரைக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் எந்தவொரு மருத்துவரும் ஜெனரிக் மருந்துகைளை பரிந்துரைப்பதில்லை. இந்த நிலையில், நாடு முழுவதும் ஜன்அவுஷதி மருந்து கடைகளை அதிகளவில் திறக்க மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வர இருப்பதை கருத்தில்கொண்டு, தற்போது மருந்து கடைகளை திறக்க முன்பவருபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.
தற்போதுவரை நாடு முழுவதும் 3,679’ஜன் அவுஷதி மருந்தகங்கள் இயங்குகின்றன. தமிழகத்தில், 339 கடைகளும், கோவையில் 31 கடைகளும் செயல்படுகின்றன. இக்கடைகளில், ‘ஜெனரிக்’ மருந்துகள் மிகக்குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
இந்த ‘ஜன் அவுஷதி கடைகளில் 700 விதமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ‘பிராண்டட்’ மருந்துகளை விட, விலை குறைவாக இருப்பதால், மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
இந்த மருந்தகங்களில், ‘ஜெனரிக்’ பெயரில் மட்டுமே மருந்துகள் கிடைக்கும். உதாரணமாக, ‘குரோசின்’ என்ற, பிராண்டட் பெயரில் கிடைக்காது. ஆனால், அதன் மூலப்பொருளாக விளங்கும், ‘பாரசிட்டமால்’ என்ற பொதுவான ஜெனரிக் பெயரில் கிடைக்கும்.
நோய்களுக்கான மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கும்போது, மருந்துகளின் அடங்கியுள்ள மூலக்கூறு களின் பெயரை மட்டும் எழுத வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், அதனை கடைபிடிப்பதில்லை.
இந்த நிலையில் மக்களிடையே ஜெனரிக் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘ஜன் அவுஷதி’ மருந்தகம் தொடங்க விருப்பமுள்ளவர்கள், http://janaushadhi.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் மருந்துகடை தொடங்க எளிதில் அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு தொடங்கப்படும் மருந்து கடைகளுக்கு மத்திய அரசு 2.5 லட்ச ரூபாய் வரையில் மானியம் வழங்கு கிறது. பார்மசி படிப்பை முடித்துள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சுயதொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ளலாம்.