கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: கனிமொழி

சேலம்:

மிழக கவர்னர் பன்வாரிலாலை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என்று திமுக மாநிங்களவை எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, எச்.ராஜாவின் தரம்தாழ்ந்த பதிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு  பதில் அளிக்க மறுத்த கனிமொழி,  தமிழகத்தில்  செயல்படாத  அரசு நடைபெற்று வருவதால், தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

மேலும்,  பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், கவர்னர்  விசாரணை கமி‌ஷன் அமைக்க அதிகாரம் கிடையாது என்றும்,  அப்படி அமைத்தாலும் அந்த விசாரணை கமிஷனில் பெண்கள் இடம்பெற வேண்டும் என்பது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு உள்ளது. ஆனால், கவர்னர் தன்னிச்சையாக விசாரணை கமிஷன் அமைத்துள்ளார் என்று கூறினார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆளுநர் செய்யும்போது, திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போதும் கவர்னரின் செயல்பாட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ள என்றும், மத்திய அரசு கவர்னர் பன்வாரிலாலை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும், அதுவே திமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.