நெட்டிசன்:

வழக்கறிஞர் சுந்தர்ராஜன் அவர்களது முகநூல் பதிவு:

இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் (IGNOU) உளவியல் பட்டமேற்படிப்புக்கான புத்தகம் இது. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என நன்கு தெரிந்தும் தென்னிந்தியர்கள் அம்மொழியை பயன்படுத்து வதில்லையாம். ஹிந்தி தெரிந்திருந்தாலும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்களாம்.

இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஹிந்தியும் ஒன்றுதானே தவிர, அது தேசிய மொழி அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்த இடத்திலும் அவ்வாறு கூறப்படவில்லை.

மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பல்கலைக்கழகம் அச்சடித்து விநியோகிக்கும் புத்தகத்திலேயே தவறான தகவலைத் தருவதன்மூலம் தென்னிந்தியர்களுக்கு எதிரான வன்மம் நிறைந்த கருத்து (முதுநிலை உளவியல்) மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் கல்வித்தரத்தை உயர்த்துவதாகக்கூறி வெளிமாநில நபர்களை துணைவேந்தர்களாக திணிக்கிறது அரசு.