டில்லி,

க்சலைட்டுகளை ஒழிப்பது குறித்து ஆலோசனை நடத்த 10 மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி திடீர்  தாக்குதலில்  தமிழகத்த சேர்ந்த 4 பேர் உள்பட  26 பாதுகாப்புபடை வீரர்கள் பரிதாபமாக மரணமடைந்தனர்.

மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, , உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங்,  நக்சலைட்களுக்கு எதிரான வியூகத்தை மத்திய அரசு மறுஆய்வு செய்யும் எனவும்,  இடதுசாரி பயங்கரவாதத்தை கையாளும் உத்திகளை மறு ஆய்வு செய்வது தொடர்பாக  மே 8ஆம் தேதி  டில்லியில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றார். வீர மரணம் அடைந்த வீரர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, நக்சல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க,  நக்சல் பாதிப்பு நிறைந்த 10 மாநில முதல்வர்களின்  ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.