அடுத்த ஆண்டு மார்ச் முதல் சமையல் சிலிண்டருக்கான மானியம் ரத்து

--

 

டில்லி

த்திய அரசு சமையல் சிலிண்டருக்கான மானியத்தை வரும் ஆண்டு மார்ச் முதல் ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மானியத்தை விட்டுக் கொடுக்கும்படி ஒவ்வொரு முறை சிலிண்டர் புக் செய்யும் போது வேண்டுகோள் வருவது தெரிந்ததே.

ஆனால் பல ஏழை மக்கள் மானிய விலையில் கூட  சிலிண்டர் வாங்க வழி இல்லாத நிலையில் உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு அடியோடு நிறுத்தப் போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை மாதந்தோறும் ரூ 4 வீதம் உயர்த்திக் கொள்ளவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது