டில்லி,

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் 15ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தொடரின்போது, முத்தலாக், தேசிய மருத்துவ கவுன்சில் போன்ற பல்வேறு புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பரபரப்பான விவாதங்களும், அவையில் அமளிகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பலமுறை பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டும், முடக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இந்தியாவில் உள்ள ஆட்சி மொழிகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் பேசும்போது, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

இந்தியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்ற மோடி அரசு விரும்புகிறது என்ற சசிதரூர், மோடி அரசு  ஐ.நா.சபையிலும்  இந்தியை ஆட்சி மொழியாக்க  முயற்சிக்கிறது என்று என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

மேலும், நாட்டில் இந்தி மொழி தேசிய மொழி கிடையாது  என்றவர் இந்தி மொழியை திணிப்பதற்கு கண்டனமும் தெரிவித்தார்.