சென்னை:
த்திய அரசு அறிவித்துள்ள மேலும் 2 வாரம்  பொது முடக்கம்   தமிழகத்திலும் தொடரும் என என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2 முறை நீட்டிக்கப்பட்ட ஊரங்கு மே3ந்தேதி (நாளை) உடன் முடிவடைய இருந்த நிலையில்,   ஊரடங்கினை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று காலை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில்,  தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளைத் தொடருவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மத்திய அரசு அளித்த தளர்வுகளை அப்படியே பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். மேலும் அரசின் ஊரடங்கு விதிமுறைகளை தொடர்ந்து கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Curfew , TN Govt , ஊரடங்கு உத்தரவு, தமிழக அரசு