டில்லி

த்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் புல்வாமா தாக்குதல் குறித்த செய்திகளை கவனத்துடன் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

.

இன்று மாலை ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம்  நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 30 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

“முந்தைய காலங்களில் பல முறை இந்த அமைச்சகம் தனியார் சாடலைட் டிவி சேனல்களுக்கு நிகழ்ச்சி மற்றும் விளம்பர சட்டம் 1995 மற்றும் அதை ஒட்டி அமைக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து செய்திகளையும் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

தற்போது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்த செய்திகள் அளிக்கும் போது தாம் அளிக்கும் செய்திகளில் உள்ள விவரங்களை கவனத்துடன் அளிக்க வேண்டும் என டிவி சேனல்கள் அறிவுறுத்தப் படுகின்றன.

சட்டம் மற்றும் ஒழுங்குக்கு எதிரான நடவடிக்கைகளை தூண்டும் வகையிலோ, அல்லது வன்முறைகளை உண்டாக்கும் வகையிலோ தேச விரோத செயல்கள் நடைபெறும் விதத்திலோ, நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையிலோ எந்த செய்திகளையும் வெளியிடக் கூடாது என்பதில் டிவி சேனல்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மேலே கண்டவற்றை அனைத்து டிவி சேனல்களும் பின்பற்ற வேண்டும்”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.