கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி…

சீனாவில் முதன் முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது.  வைரஸ் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லாத நிலையில், பரவலைத் தடுக்க பல நாடுகளிலும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த “கிளென்மார்க்” என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று கொரோனாவை குணமாக்க புதிய மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளது.  இதற்கு “பெவிபுளூ” என்று பெயரும் இட்டுள்ளது.  இந்த மாத்திரைகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஒப்புதலுக்கு அனுப்பி முறையான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது இந்நிறுவனம்.

200 மில்லி கிராம் எடை கொண்ட ஒரு மாத்திரையின் விலை ரூ. 103/- ஆகும்.  34 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டை ரூ. 3,500/- என்று இந்நிறுவனம் விலையை நிர்ணயித்துள்ளது.  இந்த மாத்திரையை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதல் நாளில் இரண்டு வேளைக்குத் தலா 1800 மில்லி கிராமும், அடுத்த 13 நாட்களுக்குத் தினமும் இரண்டு வேளையாக தலா 800 மில்லி கிராமும் உட்கொள்ள டாக்டர்கள் பரிந்துரைக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

– லெட்சுமி பிரியா