சாரிடானுக்கும் மற்றும் 327 மருந்துகளுக்கும் மத்திய அரசு தடை

டில்லி

த்திய அரசு சாரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.

மருந்துகள் தொழில்நுட்ப கழகம் பல வலி நிவாரணங்களால் உடல் நலம் பாதிக்கபடுவதாக கண்டறிந்து கூறியது.   இவற்றில் பாண்டர்ம்  குளுகோநார்ம்,  லூபிடிக்ளாக்ஸ் மற்றும் டாக்சிம் ஏ இசட் உள்ளிட்ட 6000 வலி நிவாரணிகள் அடங்கும்.  இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு சாரிடான் உட்பட 344 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.   அதை தொடர்ந்து அதே வருடம் மேலும் 5 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது/

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தடையை நீக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.   இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்  தடை செய்யப்பட்ட மருந்துஅளை மருந்துகள் தொழில் நுட்ப கழகம் மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.    அதன் படி அந்த மருந்துகளை ஆய்வு செய்த கழகம் தனது முடிவை உச்சநீதிமன்றத்துக்கு அளித்தது.

அந்த ஆய்வின் அடிப்படையில் தற்போது 328 மருந்துகளை உச்சநீதிமன்றம் தடை செய்ய சிபாரிசு செய்தது.   அதை ஒட்டி மத்திய சுகாதார அமைச்சகம் சாரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளை தயாரிக்க, விநியோகிக்க மற்றும் விற்பனை செய்ய உடனடியாக தடை விதித்துள்ளது.   மீதமுள்ள 16 மருந்துகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Central govt banned 328 drugs including Saridon
-=-