இயற்கை எரிவாயு மூலம் வாகனங்களை இயக்க மத்திய அரசு ஆலோசனை

டில்லி

வாகனங்களை இயக்க இயற்கை எரிவாயுவை உபயோகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இயற்கை எரிவாயு பொதுவான உரிமம் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.   இது வாங்குபவர் மற்றும் விற்போர் இடையே செய்யப்படும் பரஸ்பர ஒப்பந்தம் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.   மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று மக்களவையில் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அமைச்சர் தர்மேந்திர பிரதான், “வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு உபயோக்கிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.    இயற்கை எரிவாயு உபயோகிப்பது என்பது செலவைக் குறைக்கும் ஒரு அருமையான திட்டமாகும்.”  என கூறி உள்ளார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், “நேரடியாக இயற்கை எரிவாயுவை விற்பனைக்கு எடுத்துச் செல்ல குழாய்கள் இன்னும் பதிக்கப்படவிலை.   வண்டிகளில் நிரப்பப் படும் நிலையங்களுக்கு  திரவ வாயு நிலையில் குழாய் மூலம் மாற்றப்படுகிறது.  அங்கிருந்து டாங்கர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது” என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.