தினம் ரூ.1 லட்சம் கோடி பிடுங்கி விட்டு தற்போது பெட்ரோல் விலை குறைப்பா :சிவசேனா

மும்பை

தினசரி ரு. 1 லட்சம் கோடியை பெட்ரோல் டீசல் விலை உயர்வின் போது மத்திய அரசு பிடுங்கியதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது

இந்தியாவில் தற்போது தினம் தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிற்து.   கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பொதுமக்கள் இந்த விலை ஏற்றத்தினால் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.    இந்த விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர பலரும் வலியுறுத்தியும் முதலில் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

நேற்று மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியில் ரூ.1.50ஐ குறைத்தது.   அதையொட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஒரு ரூபாயை குறைக்க முடிவு செய்தன.   அதனால் மொத்த்த்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ரூ.2.50 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கு சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளிதழ் சாம்னாவில் மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளது.  சிவசேனா, “பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பை மத்திய அரசு மிகவும் தாமதமாக அறிவித்துள்ளது.   பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் தினமும் ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு சென்றுள்ளது.  இந்த பணம் மத்திய அரசு மக்களிடமிருந்து  பிடுங்கிய பணம் “ என கூற்றம் சாட்டி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Central govt daily snatched Rs 1 lakh crore from public by petrol and diesel price hike : Shiv sena
-=-