டில்லி

ர் இந்தியாவின் அனைத்து பங்குகளையும் விற்க மத்திய அரசு விரைவில் விலைப்புள்ளி கோர உள்ளது.

பல மத்திய அரசு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.   எனவே அந்த நிறுவனங்களின் கடனை தீர்த்து நஷ்டத்தைக் குறைக்க அரசு அந்நிறுவனப் பங்குகளைத்  தனியாருக்கு   விற்பனை செய்ய பல முயற்சிகள் எடுத்து வருகிறது.   அந்த நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள், எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.   ஆனால் மத்திய அரசு அந்த எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தனது காரியத்தில் கண்ணாக உள்ளது.

மத்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.   அதையொட்டி இந்த நிறுவனத்தின் 76% பங்குகளை விற்க மத்திய அரசு விலைப்புள்ளி கோரியது.    ஆனால் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.  இதனால் பங்குகளை விற்கும் மத்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்தது.

ஏற்கனவே உள்ள கடன் சுமை, மற்றும் 24% அரசு பங்குகளால் அரசின் உரிமை,  நிர்வாகச் செலவுகள், அன்னிய செலாவணி மாறுதல்கள் எனப் பல இனங்களால் இந்த விற்பனை முயற்சி தோல்வி அடைந்துள்ளது.   எனவே இதைக் கருத்தில் கொண்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் 100%  பங்குகளை விற்க அரசுக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.  இந்த 100% பங்குகளுக்கு விலைப்புள்ளிகளை அரசு விரைவில் கோர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.