ஒரு பைசா கூட வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு அளிக்கவில்லை : தெலுங்கானா முதல்வர்

தராபாத்

த்திய அரசு வெள்ள நிவாரணத்துக்கு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை எனத் தெலுங்கானா  முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பல மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.  இதில் ஐதராபாத் நகர் பெருமளவில் பாதிக்கப்பட்டது.  வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பயிர்கள் முழுகி சுமார் ரூ,5,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டது.  இதை முதல்வர் சந்திரசேகர் ராவ் மத்திய அரசுக்கு தெரிவித்து ரூ.1350 கோடி உடனடி நிவாரணம் கோரினார்.

ஆனால் இதுவரை மத்திய அரசு உதவி செய்யாமல் உள்ளதாக மாநில அரசு குற்றம் சாட்டி உள்ளது.  இது குறித்து முதல்வர் சந்திர சேகர் ராவ், “சமீபத்தில் தெலுங்கானாவில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், மற்றும் துணை குடியரசுத் தலைவர் அதிர்ச்சியைத் தெரிவித்தனர்.

என்னுடன் அவர்கள் பேசிய ஆவன செய்வதாக வாக்களித்தனர்.  அதன்படி மத்தியக் குழு தெலுங்கானா மாநிலத்துக்கு வந்து மதிப்பீடு செய்தது.   ஆயினும் நிவாரணம் வழங்குவதாகத் தெரிவித்த மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை.    இதன் மூலம் மத்திய அரசு வெற்று வாக்குறுதிகளை மட்டும் அளிக்கிறது என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

மாநிலத்தில் கடும் வெள்ளம் மற்றும் பலத்த மழையால் பேரிழப்பு ஏற்பட்ட போதிலும் மத்திய அரசு ஒரு பைசா கூட இதுவரை வழங்கவில்லை.  இந்த அணுகுமுறை தற்போது மீண்டும் அம்பலமாகி உள்ளது.  பெருநகரமான ஐதராபாத் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பேரிழப்பைச் சந்தித்த போதும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டாதது வருத்தத்தை அளிக்கிறது” எனக் கூறி உள்ளார்.