காந்தி தொடங்கிய பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளிய பாஜக அரசு

துரை

காத்மா காந்தி தொடங்கிய இரு பள்ளிகள் தமிழகத்தில் மத்திய அரசு நிதி அளிக்காததால் மூடும் நிலைக்கு வந்துள்ளது.

மகாத்மா காந்தி தனது ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில் நாடெங்கும் பல பள்ளிகளை தொடங்கி வைத்தார்.   அதில் தமிழ் நாட்டில் 12 பள்ளிகள் தொடங்கப்பட்டன.    நிதிப் பற்றாக்குறை காரணமாக 8 பள்ளிகள் மூடப்பட்டன.   மீதமுள்ள 4 பள்ளிகளில் 2 பள்ளிகளை தமிழக அரசு நிதி உதவி அளித்து நடத்தி வருகிறது.    மற்ற இரு பள்ளிகளில் 80% செலவை மத்திய அரசும் 20% செலவை ஹரிஜன சேவா சங்கமும் ஏற்று நடத்தி வருகின்றன.

தமிழக அரசால் நடத்தப்படும் கோபிசெட்டி பாளையம் தக்கர் பாபா ஆரம்பப்பள்ளி மற்றும் திண்டுக்கால் பாரதி நடுநிலைப் பள்ளி நன்கு நடைபெற்று வருகின்றன.   மதுரையில் உள்ள என்.எம்.ஆர். சுப்புராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளியும், விழுப்புரத்தின் திருக் கோவிலூரில் உள்ள உறைவிட நடுநிலைப் பள்ளி’யும மத்திய அரசு நிதி உதவியுடன் நடத்தபடுகின்றன.

இந்த இரு பள்ளிகளுக்கும் வருடத்துக்கு மத்திய அரசு தலா ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கி வந்தது.   ஆனால் கடந்த 2014-15 கல்வி ஆண்டு முதல் 4 வருடங்களாக மத்திய அரசு நிதி உதவியை அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.   இரு பள்ளிகளுக்கும் சேர்ந்து தற்போது ரூ.1.2 கோடி நிதி உதவி பாக்கி உள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர்களை சங்கத்தினர் அணுகிய போது உடனடியாக நிதி உதவி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.    ஆனால் இன்று வரை நிதி வராததால் சங்கத்தலைவர் சீனிவாசன் இந்தப் பள்ளிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள்தாக தெரிவித்துள்ளார்.