Random image

இன்றும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை : மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பு

டில்லி

தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தினம் உயர்ந்து வருகிறது.   இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கலால் வரியை குறைக்கலாம் என காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஆலோனை தெரிவித்தன.

மத்திய பாஜக அரசு இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை.   நேற்று மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவது உண்மை தான்.   ஆனால் அது குறித்து சரியாக சிந்திக்காமல் உணர்ச்சி வசப்பட்டு கலால் வரியை குறைப்பது சரியான தீர்வாகாது.” என ஜாடையாக வரி குறைப்பு நடவடிக்கை கிடையாது என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து ஒரு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.  சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.66 க்கு விற்கப்படுகிறது.  டீசல் லிட்டருக்கு ரூ.76.75க்கு விற்கப்படுகிறது.  நேற்றைய விலையை விட பெட்ரோல் 12 காசுகளு, டீசல் 11 காசுகளும் உயர்ந்துள்ளன.