அசாம் ரைஃபிள் ராணுவ பிரிவுக்கு  வாரண்ட் இன்றி கைது செய்ய அதிகாரம் அளித்த மத்திய அரசு

டில்லி

ந்திய ராணுப் பிரிவில் ஒன்றான அசாம் ரைஃபிள் பிரிவுக்கு மத்திய அரசு வடகிழக்கு எல்லப்பகுதி மாநிலங்களில் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய அதிகாரம் அளித்துள்ளது,

இந்திய ராணுவப் பிரிவுகளில் ஒன்றான அசாம் ரைஃபிள் பிரிவு வடகிழக்கு எல்லை பகுதி மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, மற்றும் மிசோரம் பகுதிகளில் காவல் பணி புரிந்து வருகிறது.   அத்துடன் இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதி காவல் பணியிலும் இந்த பிரிவு ஈடுபட்டுள்ளது.

மத்திய அரசு அசாம் ரைஃபிள் ராணுவ பிரிவுக்கு ராணுவச் சட்டப் பிரிவு 41, 47, 48, 49, 51, 53, 54, 149, 150, 151 மற்றும் குற்றவியல் நடைமுறை பிரிவு 152 ந் கீழ் சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.   இந்த சிறப்பு அதிகாரம் அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்புர், நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்களில் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு அதிகாரங்கள் மூலம் மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் இந்த ராணுவப் பிரிவு யாரையும் நீதிபதியின் உத்தரவின்றி நேரடியாக கைது செய்ய முடியும்.  அது மட்டுமின்றி எந்த இடத்தையும் உத்தரவின்றி சோதனை செய்ய முடியும்.

அத்துடன் குற்றவியல் பிரிவு 152ன் கீழ் வாரண்ட் இல்லாமல் சோதனை இடவும் கைது செய்யவும் முடியும்.   இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தப்பிக்க இயலாதபடி அவரை அடைத்து வைக்க இந்த ராணுவப் பிரிவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.