ஏசி உள்ளிட்ட 19 பொருட்கள் மீது சுங்க வரி அதிகரிப்பு

--

டில்லி

றக்குமதி செய்யப்படும் விமான எரிபொருள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட 19 பொருட்கள் மீதான சுங்க வரி 20% உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்துக் கொண்டு வருகிறது.   அதனால் அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்து வருகிறது.   தற்போது வெளிநாட்டில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் போது அன்னிய செலாவணி மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.  எனவே இறக்குமதியை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஆதையொட்டி இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களின் மீதான சுங்கவரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.   இதில் தங்க நகைகள் மீதான வரி 15% லிருந்து 20% ஆகி உள்ளது. ரேடியல் டர்யர், ஸ்பீக்கர், காலணிகள் ஆகியவற்றின் மீதான சுங்க வரியும் 5% அதிகரித்துள்ளது.

இந்த வரி அதிகரிப்பின் கீழ் விமான எரி பொருள், வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் இடம் பெற்றுள்ளன.    தேவை அற்ற பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க இத்ஹகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.