அரசு திட்டங்களுக்கு இந்தியில் பெயர் எதற்கு ? : தம்பிதுரை கேள்வி

சென்னை

க்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதாக குற்றம் சாட்டி உள்ளார்.

அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளரான தம்பிதுரை மக்களவை துணை சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது மத்திய அரசு இந்தி மொழியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் திணித்து வருவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “ஐரோப்பிய நாடுகளில் சுமர் 2% மக்கள் பேசும் மொழிகள் கூட ஆட்சி மொழியாக பயன்படுத்தப் படுகிறது. அதே நேரத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாம் அத்தியாயத்தின் படி 22 மாநில மொழிகளுக்கு ஆட்சி மொழியாக பயன்படுத்த அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டின் நிலை என்ன?

இந்தி பேசாத மக்களின் மீது மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்களின் பெயர்கள் இந்தியில் இருப்பதை ஒப்புக் கொள்ள முடியும். ஆனால் இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்திப் பெயரில் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. உதாரணமாக பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா என்னும் திட்டத்தின் பெயரை தமிழ் மக்களால் புரிந்துக் கொள்ள முடிவதிலை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய பாஜக அரசை தேவைப்படும் போது மட்டுமே ஆதரித்துள்ளார். அந்த அரசு தவறு செய்யும் போது கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது நாங்களும் அதையே செய்து வருகிறோம். மத்திய அரசு இந்தித் திணிப்பு என்னும் த்வறை செய்யும் போது அதை நாங்கள் எதிர்க்கிறோம்” என அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி