மத்திய அரசு தகவல் ஆணைய சுதந்திரத்தில் தலையிடுகிறது : ஆணையர் எதிர்ப்பு

புனே

கவல் ஆணய அலுவலக சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யுலு தெரிவித்துள்ளார்.

தகவல் ஆணையம் என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு செய்பவர்களுக்கு அந்த தகவல்களை சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து பெற்று தருவதற்காக ஏற்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமப்பில் ஆணையராக பணி புரிபவர் ஸ்ரீதர் ஆசார்யுலு. இவர் புனே நகரில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

ஸ்ரீதர் ஆசார்யுலு தனது உரையில், “தகவல் அறியும் சட்டத்தில் மத்திய அரசு பல மாறுதல்களை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் தகவல் ஆணையத்தின் அதிகாரம் மிகவும் குறைந்து விடும். அதிகார வரம்பின் படி தகவல் ஆணையர் பதவி செயலருக்கு கீழ் கொண்டு வரப்பட்டால் அவரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

இது தகவல் ஆணயத்தின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதை தெளிவாக காட்டுகிறது. மத்திய அரசு தகவல் ஆணையத்தை தன் கைக்குள் கொண்டு வர முயலுவதாகவே எனக்கு தோன்றுகிறது. இது போல முடிவு எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது.   இது முழுக்க முழுக்க தவறான நடவடிக்கை ஆகும்.

சமீபத்தில் ரபேல் ஒப்பந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்த விவங்களை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ரபேல் விமானங்களின் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல் தரக்கூடாது என்பதில் நானும் உறுதியாக உள்ளேன். ஆனால் உச்சநீதிமன்றம் இவ்வாறு கேட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.