டில்லி

மொபைல் செயலிகளான டிக் டாக் மற்றும் ஹலோவுக்கு ஆர் எஸ் எஸ் புகாரின் அடிப்படையில் மத்திய அரசு கேள்விகள் எழுப்பி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

மொபை;ல் செயலிகளான டிக் டாம் மற்றும் ஹலோவுக்கு ஏராளமான பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.   அதே நேரத்தில் இந்த செயலிகளில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் தரமேற்றப்படுவதாகவும் அவற்றை சமூக வலை தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்டவைகளில் பகிரப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.    ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அங்கமன சுதேசி ஜாக்ரன் மன்ச் இது குறித்து பிரதமரிடம் புகார் அளித்தது.

அந்த புகாரில் இந்த செயலிகள் மூலம் பல சமூக விரோத செயல்கள் நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த புகார்களின் மீது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த செயலிகளுக்கு அமைச்சரவை 21 கேள்விகள் எழுப்பி நோட்டிஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.  இந்த கேள்விகளுக்கு சரியான விடை அளிக்காவிடில் இந்த செயலிகள் தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய மக்கள் எங்களுக்கு இந்திய மக்கள் பேராதரவு அளித்து வருவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.  நாங்கள் இந்தியாவில் அடுத்ட மூன்றாண்டுகளில் ரூ.700 கோடி வரை முதலீடு செய்ய எண்ணி உள்ளோம்.    ஆகவே நாங்கள் எங்கள் பயனாளிகள் நலனில் அக்கறையுடன் செயல் படுவோம்.  அத்துடன் அரசின் நன்மதிப்பை பெற்று எங்கள் நிறுவனம் செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.