டில்லி

கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருவதால் மத்திய அரசு 53.70 லட்சம் எம்டெசிவிர் ஊசி மருந்து மற்றும் 46000 வெண்டிலேட்டர்களுக்கு ஆர்டர் செய்துள்ளது.

கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் ஊசி மருந்து, வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   இந்த பற்றாக்குறையால் பலர் மரணம் அடைய நேரிட்டுள்ளது.  இதுவரை கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக வாங்கப்பட்ட ரெம்டெசிவிர் மற்றும் வெண்டிலேட்டர்கல் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்குத் தகவல் ஆணையம் அளித்துள்ள பதிலில், “மத்திய அரசு இதுவரை 53.70 லட்சம் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கும் 46,386 வெண்டிலேட்டர்களுக்கும் ஆர்டர் அளித்துள்ளது.   இதில் இதுவரை 38.05 லட்சம் மருந்துகளும் 43,979 வெண்டிலேட்டர்களும் வந்துள்ளன.  இவை அனைத்தும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளன..

இவ்வாறு அனுப்பப்பட்ட 43,979 வெண்டிலேட்டர்களில் 38,959 வெண்டிலேட்டர்கள் மட்டுமே நிறுவப்பட்டு மற்றவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.  ரெம்டெசிவிர் மருந்துகளில் மகாராஷ்டிராவுக்கு மட்டும் 11.57 லட்சம் ஊசிகள் அளிக்க வேண்டிய நிலையில் 7.99 லட்சம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

அடுத்தபடியாக உபி மாநிலத்துக்கு 4.95 லட்சம் ஊசிகள் தேவைப்பட்ட நிலையில் 3.93 லட்சமும் குஜராத் மாநிலத்தில் 4.19 லட்சத்துக்குப் பதிலாக 3.54 லட்சம் ஊசிகளும் அளிக்கப்பட்டுள்ளன.  இதைப் போல் கர்நாடகா மாநிலத்துக்கு 5.75 லட்சத்துக்குப் பதிலாக 3.75 லட்சம் ஊசிகள் வழங்கபட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.