827 பாலியல் இணைய தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு

டில்லி

ணைய சேவை நிறுவனங்களுக்கு 827 பாலியல் இணைய தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுல்ளது.

இணைய தளங்களில் ஒரு சில பால்யல் உள்ளடக்கங்களை கொண்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த இணையதளங்களை முடக்க வேண்டும் என வலியுறுத்தி உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பாலியல் உள்ளடக்கம் கொண்ட இணைய தள பட்டியல் தரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி 857 இணையதளங்களை முடக்க அரசை வலியுறுத்தியது. அதன் படி மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த இணைய தளங்களை ஆய்வு செய்தது. அதில் 30 இணைய தளங்களில் பாலியல் உள்ளடக்கம் இல்லாததால் 827 இணைய தளங்களை முடக்க தொலைத் தொடர்புத் துறைக்கு அறிவுறுத்தியது.

இந்த அறிவுறுத்தலை ஏற்றுக் கொண்ட தொலை தொடர்புத் துறை  உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள இணைய தளங்களில் 827 இணைய தளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என இணைய சேவை நிறுவனங்களளுக்கு  உத்தரவிட்டுள்ளது.