முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு : தமிழக அரசின் வேண்டுகோள் நிராகரிப்பு

டில்லி

முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்கத் தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட்டிக்கப்பட்டது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் முழுவதுமாக முடிவடையாத நிலை உள்ளது.

ஆயினும் மத்திய அரசு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தத் தீர்மானித்தது.

தமிழக அரசு சார்பில் இந்த கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கை மனுவுக்கு மத்திய அரசு இன்று பதில் அனுப்பி உள்ளது.

 இந்த பதிலில் முதுநிலை மருத்துவப்படிப்புக்களுக்கான் கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

You may have missed