டில்லி

புதிய வாகனங்கள் வாங்க மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.  குறிப்பாக இந்த கணக்கு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அனைத்து வாகன விற்பனையும்  சரிந்துள்ளது.    இதனால் இந்த காலகட்டத்தில் வாகன உற்பத்தி 13.8% குறைந்துள்ளது.    இதனால் பல லடக்கணக்கான ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் உண்டாகி வருகிறது.

வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களான  மாருதி, மகிந்திரா அண்ட் மகிந்திரா, டொயோட்டா, கிர்லோஸ்கர், போர்ட் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் உற்பத்தியைக் குறைத்துள்ளன.   இதனால் உதிரிபாக உற்பத்தித் தொழிலும் கடுமையாக முடங்கி உள்ளது.    இந்த நிலைய மாற்ற வாகன உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசு தனது செலவைக் குறைக்கக் கடந்த சில வருடங்காலாக புதிய வாகனங்கள் வாங்க மத்திய அமைச்சகம்,  மத்திய அரசுத் துறைகள் போன்றவற்றுக்குத் தடை விதித்திருந்தது.    தற்போது வாகன விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்ததையொட்டி மத்திய அரசு அந்த தடையை விலக்கிக் கொண்டுள்ளது.

மத்திய அமைச்சகம் மற்றும்  துறைகளுக்கு எவ்வளவு வாகனங்கள் தேவையோ அவற்றை வாங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.   வாகன விற்பனை கடும் வீழ்ச்சி  அடைந்துள்ளதால் அந்த துறைக்கு உதவ அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

.