ஓரினச் சேர்க்கை வழக்கு : மழுப்பலாக பதிலளிக்கும் மத்திய அரசு

டில்லி

ரினச் சேர்க்கை தடை சட்டமான 377 சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதலும் அளிக்காமல் தடையும் செய்யாமல் உச்சநீதிமன்றத்துக்கு பதில் அளித்துள்ளது.

சட்ட எண் 377ன் படி ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.   அந்தச் சட்டம் தவறு என ஒரு வழக்கில் டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில்  உச்சநீதிமன்றம்  சட்டம் சரியானது என தீர்ப்பளித்தது.  தற்போது அதை எதிர்த்ஹ்டு முறாஇயீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் முன் இது குறித்து அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.   அதற்கு பதிலளிக்க கொடுத்த கால அவகாசத்தையும் மீறி மேலும் கால அவகாசமும் வழக்கை விசாரிக்க தாமதம் செய்யுமாறும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.  அதை நிராகரித்த உச்சநிதிமன்றம் விசாரணையை தொடங்கி உள்ளது.   அத்துடன் உடனடியாக மத்திய அரசின் பதிலை கூறி உள்ளது.

மத்திய அரசு அளித்துள்ள பதிலில், “சட்ட அமர்வுக்கு சட்ட எண் 377ல் சொல்லப்பட்டவை மட்டுமின்றி சொல்லப்படாதவைகளைக் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு.   இந்த அமர்வு சட்ட எண் 377ஐ சரியான சட்டமென கூறினால்  அதாவது வயது வந்த இருவரின் சொந்த நடவடிக்கைகளை தவறு என சொன்னால் அது குறித்து அரசுக்கு ஆட்சேபம் இல்லை.  அதே நேரத்தில் இது தனிப்பட்ட உரிமை என உச்சநீதிமன்றம் கருதி இந்த சட்டத்தை ரத்து செய்தாலும் அரசுக்கு ஆட்சேபம் கிடையாது.” என தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர், “அரசு கட்சியின் அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் வகையில் இந்த பதிலை தயாரித்துள்ளது.  இதில் விமர்சிக்க ஏதும் இல்லை.   உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மத்திய அரசு தயாராக உள்ளது என்பதை தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், “பாஜக அரசு இந்த விவகாரத்தை கவனமாக கையாள நினைத்து இவ்வாறு மழுப்பலான பதில் அளித்துள்ளது.   உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படி நடக்க வேண்டியது அரசின் கடமை தான்.   ஆனால் அரசின் கருத்து என்ன என்பதை சரியாக தெரிவிக்காமல் உள்ளது வருந்தத் தக்கது” என கூறி உள்ளார்.

You may have missed