மத்திய அரசு கேட்கும் அதிக நிதி : பாராளுமன்றத்தின் பதில் என்ன?

டில்லி

த்திய அரசு தனது செலவினங்களுக்காக 85,948 கோடி ரூபாய் நிதி உதவிக்கு ஒப்புதல் அளிக்க பாராளுமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மத்திய் அரசால் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் அளிக்கப்ப்பட்டது.    அந்த நிதிநிலை அறிக்கைக்கு பாராளுமன்றம் விவாதத்துக்கு பிறகு ஒப்புதல் அளித்தது.   தற்போது இன்று மத்திய அரசு நிதி பற்றாக்குறை குறித்து அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அளித்த போது அரசின் செலவினங்களாக 24.42 லட்சம் கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.   இது சென்ற ஆண்டின் செலவினமான 21.43 லட்சம் கோடியை விட அதிகமாகும்.     ஆனால் தற்போது அரசுக்கு மேலும் ரூ. 85,948 கோடி ரூபாய் நிதி உதவி தேவை என அறிவித்துள்ளது.

அந்த அதிக செலவினங்களில் மாநில வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய நிதி உதவி மட்டும் ரூ. 150  கோடி ரூபாய் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.   இந்த உதவி போக மற்ற நிதி நிலையை வங்கிகல் தங்களிடம் உள்ள சேமிப்பில் இருந்து சரி செய்துக் கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த அதிக நிதி தேவையான ரூ. 85948 கோடி ரூபாய்க்கான ஒப்புதல் அளிக்க பாராளுமன்றத்துக்கு மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.   இன்று பாராளுமன்ற இரு அவைகளும் நடைபெறாததால் இந்த கோரிக்கை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.