டில்லி

னில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் நிறுவனம் குறித்த நேரத்தில் கப்பல்களை அளிக்காததால் மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி நடத்தும் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நேவல் அண்ட் எஞ்சினியரிங் லிமிடெட் என்னும் நிறுவனம் கப்பல் கட்டும் தொழில் செய்து வருகிறது.  சுருக்கமாக ஆர் நேவல் என அழைக்கப்படும்  இந்த நிறுவனத்துக்கு மத்திய  பாதுகாப்புத் துறை கரை ஓர பாதுகாப்புக் கப்பல்களுக்கான ஆர்டர்கள அளித்துள்ளது.

கடந்த 2015 ஆம் வருடத்தில் இருந்து இந்நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.   இந்த நிறுவனத்தால் வங்கிக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை மட்டுமின்றி நிறுவனச் செலவுகளுக்கும் நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் நிறுவனம் முழுவதுமாக இயங்க முடியாமல் உள்ளது.

இந்நிறுவனத்துக்கு அதிக அளவில் கடன் கொடுத்திருந்த ஐடிபிஐ வங்கிக்குக் கடன் சலுகை அளிக்கச் சமீபத்தில்  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலம் ஆர் நேவ்ல நிறுவனம் மனு அளித்தது.    அத்துடன் விரைவில் நிறுவனம் திவால் மனு அளிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

கடந்த 2014-15 ஆம் வருடம் இந்நிறுவனம் ஐந்து பாதுகாப்புக் கப்பல்களை மத்திய பாதுகாப்புத் துறைக்கு அளிக்க வேண்டி இருந்தது.  ஆனால் இது வரை இந்த ரூ.2500 கோடி மதிப்பு வர்த்தகத்தில் எதுவும் நடைபெறவில்லை.   இதனால் மத்திய அரசு ஆர் நேவல் நிறுவனத்துக்கு விளக்கம் கோரி நோட்டிஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.

அத்துடன் தாமதமானால் செலுத்த வேண்டிய அபராதத்துக்கான ரூ. 980 கோடி வங்கி உத்தரவாதத்தை மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் அளித்துள்ள நோட்டிசில், “கடந்த 2011 ஆம் வருடம் ஆர் நேவல் நிறுவனத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின்படி 2000 டன்கள் பாதுகாப்பு கப்பல்கள் ஐந்தை வரும் 214-15 ஆம் வருடத்தில் அளிக்க வேண்டும்.   ஆனால் இது வரை ஒரு கப்பல் கூட அளிக்கவில்லை. இதுவரை இந்த கப்பல்களை அளிக்காததற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

இதனால் அரசுக்கு உண்டான நஷ்டத்தை ஈடுகட்ட நிறுவனம் அளித்துள்ள ரு. 980 கோடி மதிப்புள்ள வங்கி உத்தரவாதத்தை அரசு எடுத்துக் கொண்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.