மின்சார வாகனம் வாங்குவோருக்கு மானியம் : அரசு முடிவு.

டில்லி

மின்சாரக் வாகனம் வாங்குவோருக்கு மத்திய அரசு மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது.     பெட்ரோல் விலை ரூ.80 ஐயும், டீசல் விலை அதை விட சற்றே குறைவாகவும் இருந்து வருகிறது.    சுற்றுச் சூழலுக்கு இவ்வாகனங்களால் பெரும் மாசு உண்டாகிறது.    டில்லி உள்ளிட்ட நகரங்களில் பல இடங்களில் டீசல் வாகனங்களுக்கு தடை உண்டு.    அது தவிர அன்னிய செலவாணியில் பெட்ரோல் மற்றும் டீசல் செலுத்தி வரும் ஆதிக்கத்தால் ரூபாய் மதிப்பு கடுமையாக குறைந்துள்ளது.

இதை ஒட்டி பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் இயக்க அரசு ஊக்கம் அளித்து வருகிறது.     இதற்கான திட்டம் ஒன்று இயற்றப்பட்டு அதற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.   அதில் இருந்து மின்சார வாகனம் வாங்கும்  மக்களுக்கு நிதி வழங்கப் போவதாக அறிவித்தது.    இவ்வகை வாகனங்களின் பேட்டரிகளின் தொழில்நுட்பத்தினால் வாகனங்கள் வாங்க பலர்  முன் வரவில்லை.

தற்போது இந்த தொழில் நுட்பம் மேம்படுத்தபட்டுள்ளது.   அதனால் மக்களின் கவனம் இவ்வகை வாகனங்கள் மீது திரும்பி உள்ளது.   அதை மேலும் மேம்படுத்த மின்சார வாகனம் வாங்கும் அனைவருக்கும் மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.   விரைவில் இது குறித்த அறிவிப்பை அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.

அதன்படி இந்த மின்சார வாகனங்களின் பேட்டரி திறனை பொறுத்து மானியம் நிர்ணயிக்கப்பட உள்ளது   பேட்டரியின் திறனைப் பொறுத்து ஒவ்வொரு கிலோ வாட் அவருக்கும் ரூ. 10000 வரை மானியம் அளிக்க உள்ளது.  மின்சார வாகனங்களுக்கு 14 கிலோ வாட் அவர் வரை உள்ள பேட்டரிகள் பொருத்தப்பட உள்ளதால் ரூ.1.4 லட்சம் வரை மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

உதாரணமாக இரு சக்கர வாகனங்கலீல் 2 கிலோ வாட் அவர் பேட்டரி உள்ளதால் ரூ. 20 ஆயிரம் மானியம் கிடைக்கக் கூடும்.   ஆட்டோக்களில் 4 அல்லது 5 கிலோ வாட் அவர் பேட்டரி பொருத்துவதால் ரூ. 40000 முதல் ரூ.50000 வரை மானியம் கிடைக்கலாம்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: central govt to give subsidy for electric car buyers
-=-