மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒப்புதல் இல்லை

துரை

மிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்ச்ரவை ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.   ஆயினும் அந்த மருத்துவமனை அமையும் இடம் குறித்து மாநில அரசு ஒரு முடிவு டொல்லாமல் இருந்தது.  கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் அளிக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

அதை ஒட்டி தமிழக அமைச்சர் உதயகுமார் மத்திய அரசு இதற்குஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.   அத்துடன்  டில்லியில் உள்ள மத்திய மருத்துவமனை கட்டுமான  பணிகளுக்கான நிறுவன குழுவினர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சமீபத்தில் மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையை சேர்ந்த ஹக்கிம் என்பவர் தகவல் அறியும்சட்டத்தின் கீழ் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்த பதிலில், “மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுவரை மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கவில்லை.  அத்துடன்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.   அதே போல் இது தொடர்பாக எந்த நிறுவனத்துக்கும் இதுவரை டெண்டர் அளிக்கவில்லை” என தெரிய வந்துள்ளது.

 

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Central Health ministry didn't approve Mdurai AIIMS Hospital so far
-=-