டில்லி

த்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று சண்டே சம்வாத் என்னும் ஞாயிறு உரையின் ஆறாம் பகுதியில் கலந்துக் கொண்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டி விட்டது  இதில் 1.15 லடம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 66.6 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 27 லட்சம் பேருக்கு மேல் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது சண்டே சம்வாத் என்னும் ஞாயிறு உரையின் ஆறாம் பகுதியில் கலந்துக் கொண்டார்.  அவர் தனது உரையில், “இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கான உள் தடுப்பூசி எதுவும் பரிசோதனையில் இல்லை. சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக்  ஆகியவற்றின் தடுப்பூசி பரிசோதனை விரைவில் முடிந்து அதிகார பூர்வ ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக மத்திய அரசு இரண்டாம் கட்டமாக மாநிலஙளுக்கு ரூ.1,352 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.  இந்த தொகை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என மூன்று தவணைகளாக அளிக்கப்பட்டு வருகிறது.  தற்போதைய நிலையில் கொரோனா பரவுதலில் எவ்வித மாற்றமும் இல்லை.  அளவுக்குக் குறைவாகவோ அல்லது கவலைப்படும் அளவுக்கு அதிகமாகவோ இல்லை.

வரும் பண்டிகை தினங்களை மக்கள் வெளியில் செல்லாமல் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  சமீபத்தில் கேரள மாநிலத்தில் நடந்த ஓணம் விழாவில் அதிகமான பேர் கலந்து கொண்டதற்கான விலையை தற்போது அம்மாநில மக்கள் அளித்து வருகின்றனர்   வெகுவாக குறைந்திருந்து கொரோனா பாதிப்பு கேரளாவில் மீண்டும் அதிகரித்துள்ளது.

தற்போது சீனாவில் தயாராகும் தரமற்ற ஆக்சி மீட்டர்கள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன  எனவே ஆக்சி மீட்டர்கள் வாங்கும் போது தரமானது மற்றும் இந்திய அரசின் ஒப்புதல் பெற்றவைகளை மட்டும் வாங்கவும்.  நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது.  இந்தியாவில் தினசரி 6400 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.