ராஜ்நாத் சிங்குக்கு எலும்பு முறிவு

டெல்லி:

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் தினமும் காலை நடைபயிற்சி மேற்கொள்வார்.

இந்த வகையில் இன்று அதிகாலையில் ராஜ்நாத் சிங் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு இடது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். அவர் தற்போது நலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.