டெல்லி:

பிரதமர் மோடி குறித்த தகவல்களை அளிக்காமல் அவரை 3வது முறையாக மத்திய தகவல் ஆணையம் பாதுகாத்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளது.

குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவு தலைவர் சவுகான், மத்திய உள்துறை முதன்மை ம க்கள் தகவல் தொடர்பு அலுவலருக்கு மனு அளித்திருந்தார். அதில் பிரதமர் மோடி முதல் முறையாக பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பித்த போது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்கள், அதை தொடர்ந்து புதுப்பிக்கட்ட போது அளித்த தகவல்கள், கவுரவ பாஸ்போர்ட் வழங்கப்பட்டபோது பெறப்பட்ட ஆவணங்கள் ஆகிய தகவல்களை அளிக்குமாறு கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்க அந்த அதிகாரி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து முதன்மை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் வசம் இது மேல் முறையீடு செய்யப்பட்டது. உள்துறை அதிகாரியின் மறுப்பு உத்தரவை இவரும் ஏற்றுக் கொண்டு பதில் அளிக்க உத்தரவிட மறுத்துவிட்டார். ‘‘சவுகான் கோரியிருந்த தகவல்கள் பொது நல நோக்கம் கொண்டதல்ல. ஒருவரது தனிப்பட்ட தகவல்களை அளிக்க கட்டுப்பாடு இச்சட்டத்தில் உள்ளது. அதிக பொது நலன் இருந்தால் மட்டுமே தனிப்பட்ட தகவல்களை அளி க்க முடியும்’’ என்று மாத்தூர் தெரிவித்தார்.

‘‘மோடி மிகவும் பிரபலமான ஒரு நபர். நான் கேட்டிருக்கும் தகவல்கள் ஏற்கனவே பொது இணையதளத்தில் உள்ளது. அதனால் அந்த தகவல்களை தாராளமாக வெளியிடலாம். இதில் அதிக பொது நலன் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்று சவுகான் தெரிவித்தார். இது முதல் முறையல்ல. மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை பாதுகாக்க மத்திய தகவல் ஆணையம் முயற்சி செய்கிறது.

கடந்த ஜனவரி மாதம் சத்யானந்தா மிஸ்ரார் என்பவர், விவிஐபி வெளிநாட்டு பயணங்களின் செலவின விபரங்களை அளிக்க வேண்டும். இது அதிக பொது நலன் நோக்கம் கொண்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார்.

இதற்கு மாத்தூர் பதில் கூறுகையில்,‘‘முக்கிய பாதுகாப்பு தொடர்புடையது என்பதால் பிரதமரின் வெளிநாட்டு செலவினங்கைள கணக்கிட்டு வெளியிட முடியாது’’ என்று தெரிவித்திருந்தார்.

இதேபோல், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோடி பட்டம் படித்த விபரங்களை அளிக்க டெல்லி பல்கலைக்கழகம் மறுத்திருந்தது. இதற்கு தேவையான தகவல்கள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை எடுத்து சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மத்திய தகவல் ஆணையராக இருந்த ஸ்ரீதர் ஆச்சார்யலு துணிச்சலாக முடிவெடுத்து மோடி பட்டப் படிப்பு குறித்த தகவல்களை அளிக்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார். பொது வாழ்வில் இருப்பவர்களின் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டும் வகையிலான ஆச்சார்யலுவின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பிரச்னையில், சவுகான் கடந்த 2016ம் ஆண்டு இந்த தகவல்களை கேட்டிருந்தார். முதல் பாஸ்போர்ட் பெற விண்ணப்பத்துடன் மோடி சமர்ப்பித்த ஆவணங்கள், பின்னர் புதுப்பித்தல் அல்லது கவுரவ பாஸ்போர்ட் பெற சமர்ப்பிக்கப்பட்ட ஆவண விபரங்களை கேட்டிருந்தார். இதற்கு மத்திய தகவல் ஆணையர், முதல் மேல் முறையீட்டு அதிகாரி ஆகியோர் அளித்த பதில் திருப்தி இல்லாததால் மீண்டும் கடந்த செப்டம்பரில் இரண்டாவது முறையாக அந்த மனுவை மேல்முறையீடு செய்தார்.

‘‘மோடி இந்த தகவல்கள் ரகசியமானவை என்று குறிப்பிடவில்லை. இது தொடர்பாக மோடியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா?. அவ்வாறு விளக்கம் கேட்காமல் எப்படி மறுக்கப்பட்டது. இந்த கேள்வியில் பொது நலன் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களை வெளிப்படையாக அளிப்பதால் மோடிக்கு நலனுக்கு எப்படி பாதிப்பு ஏற்படும்.

குஜராத் முதல்வராகவும் இருந்த, பிரதமராகவும் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள மோடி குறித்த தகவல்கள் மட்டுமே கேட்கப்பட் டுள்ளது. அவரது வெளிப்படைதன்மை என்பது பொது நலன் சார்ந்ததே’’ என்று சவுகான் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 3ம் நபர் விபரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஆவணங்களையும் அவர் மேற்கோள் காட்டி ஆதாரங்களையும் இணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.