சென்ட்ரலில் இருந்து பூங்கா ரெயில் நிலையம் செல்ல புதிய சுரங்க பாதை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை:

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில்  இருந்து பூங்கா ரெயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் செல்லும் வகையில் நவீன முறையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது. இந்த சுரங்கபாதை பொதுமக்கள் உபயோகப்படுத்தும் வகையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த சுரங்கபாதை காரணமாக, சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலையை கடப்பது குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை சென்ட்ரலுக்கும், பூங்கா மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் இடையே பொதுமக்கள் செல்லும் வகையில் 3 சுரங்க பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தற்போது முதல் சுரங்கபாதை திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சுரங்க பாதை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி சாலையை கடக்க  பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

இந்த சுரங்கபாதையின் ஒரு பகுதி, மூர் மார்கெட் காம்பிளக்ஸின் ஒரு பக்கம் வெளியேறும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.  மற்றும் பூங்கா புறநகர் ரயில் நிலையத்திற்கும் செல்லலாம். மிகவும் நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்க நடைபாதையில்,  தானியங்கி மின் படிக்கட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.