கல்கத்தா,
மேற்குவங்க மாநிலத்தில் அசன்சோலில் பாஜ நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மத்திய கனரகத் தொழில் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ நேற்று மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றார். அப்போது அவர் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களால் செங்கற்களால் தாக்கப்பட்டார்.
babu1
அசன்சோலில் சட்ட விரோதமாக இயங்கும் இறைச்சிக் கூடங்களை மூட வலியுறுத்தி அமைச்சர் பாபுல் சுப்ரியோ தலைமையில் பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர் மலாய் கடாக் ஆதரவுடன்  இறைச்சிக் கூடங்கள் இயங்குவதாகக் குற்றம் சாட்டிய பாஜகவினர், அவரது வீட்டை நோக்கி முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்த்னர்.
இதையடுத்து அவர்கள் அருகிலுள்ளற  தக்ஷிண் காவல் நிலையம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.  அப்போது, அங்கு வந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதையடுத்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி அமைச்சர் பாபுல் சுப்ரியோ காரில் காவல்நிலையம் சென்றார். அப்போது அவர் மீது மர்ம நபர்கள் செங்கற்கள் வீசி  தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து சுப்ரியோ கூறியதாவது:
காவல் நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த என் மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கற்களை வீசினர். இதனால், எனது கார் கண்ணாடிகள் சேதமடைந்தன. அவர்கள் எனக்கு எதிராக கருப்புக் கொடியையும் காட்டினார்கள். அவர்களை எனது கார் அருகில் நெருங்குவதற்கு போலீசாடர் ஏன் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை?
நடந்த சம்பவத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்திருக்கிறேன். அவர், இதுதொடர்பாக, மாநில அரசிடம் விளக்கம் கேட்பார் என்றார்.
மத்திய அமைச்சரின் கார் தாக்கப்பட்டதன் காரணமாக  அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதற்கிடையில், அமைச்சர் பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்டதைக் கண்டித்து, 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முதல்வர் மம்தா பானர்ஜியின் உருவ பொம்மையை எரிக்கவும் பாஜக மாநிலத் தலைமை முடிவு செய்துள்ளது.