அமெரிக்கா : இந்திய வம்சாவளி உறுப்பினர் பங்கேற்ற சந்திப்பில் பங்கு கொள்ள மத்திய அமைச்சர் மறுப்பு

வாஷிங்டன்

மெரிக்காவில் இந்திய அரசுக்கு எதிராகக் கருத்து கூறிய இந்திய பெண் உறுப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துக் கொள்ள மறுத்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர் பிரமிளா ஜெயபால் ஆவார்.  இவர் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிராக கருத்துக் கொண்டவர் ஆவார்.    சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துக் கொண்ட பிரமிளா காஷ்மீர் பகுதியில் இந்திய அரசு இணையம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளை முடக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் இந்த வாரம் அமெரிக்காவுக்குச் சென்றார்.  அங்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல், மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட கருத்தரங்கத்தில் கலந்துக் கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த உறுப்பினர்களில் பிரமிளாவும் ஒருவர் ஆவார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கூட்டத்தில் பிரமிளா கலந்துக் கொள்ளக் கூடாது எனக் கூறி உள்ளார்.   ஆனால் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் அதற்கு மறுத்துள்ளார்.  ஆகவே இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஜெய்சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரமிளா, “இந்த நடவடிக்கைகள் மூலம் இந்திய அரசு எந்த ஒரு எதிர் கருத்தையும் விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது.   தற்போது அக்குள்ள தீவிரமான நிலையில் அமைச்சருடன் உரையாடுவதன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பினேன்.

ஆனால் அவர் நான் அந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளக் கூடாது எனக் கூறி உள்ளார்.  அதற்குக் கூட்டம் நடத்தியவர் ஒப்புக் கொள்ளாததால் அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.    இந்திய அரசு எந்த ஒரு எதிர்ப்பாளரையும் சந்திக்க விரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: central Minister, Indian origin, jayshankar, Kashmir issue, Patrikaidotcom, Pramila Jayapal, tamil news, US, Woman mp, அமெரிக்கா, காஷ்மீர் விவகாரம், ஜெய்சங்கர், பிரமிளா ஜெயபால், பெண் எம்பி, மத்திய அமைச்சர், மாற்றுக் கருத்து
-=-