சுஸ்மா மீதான ஆன்லைன் தாக்குதலுக்கு நிதின் கட்காரி எதிர்ப்பு

டில்லி:

சுஸ்மா சுவராஜ் மீதான ஆன்லைன் தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பாஸ்போர்ட் வழங்கும் விவகாரத்தில் அதிகாரியை இடமாற்றம் செய்து உத்தரவிட்ட வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு எதிராக சமூக வலை தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

டுவிட்டரில் இந்த கண்டனங்களை சந்தித்து வரும் சுஸ்மாவுக்கு ஆதரவாக அவரது கட்சியினரும், மத்திய அமைச்சர்களும் கருத்து தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுஸ்மாவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார். இவரை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின்கட்காரி சுஸ்மா மீதான ஆன்லைன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பாஸ்போர்ட் கிடைக்க சுஸ்மா சுவராஜ் எடுத்த முடிவு தவறில்லை. இது எதிர்பாராதவிதமாக தான் நடந்தது. அந்த முடிவை அவர் எடுத்தபோது அவர் நாட்டிலேயே ல்லை. அவருக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பு கிடையாது. எனினும் அந்த முடிவு எடுக்கப்பட்டதில் தவறில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி