உச்ச நீதிமன்ற உத்தரவை மீறச் சொல்லும் பாஜக அமைச்சர்

சென்னை

த்திய பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பொருட்படுத்தாமல் தீபாவளிக்கு வெடி வெடிக்கச் சொல்லி உள்ளார்.

சுற்றுச் சூழல் மாசடைவதாகக் கூறி பட்டாசுகளை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.. அதை ஒட்டி தமிழக அரசு பட்டாசு வெடிக்க அனுமதி கோரி மனு ஒன்றை உச்சநீதிமன்றத்துக்கு அளித்தது. அப்போது உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவித்தது.

அந்த உத்தரவை நீக்குமாறு தமிழ்நாடு அரசு அளித்த மேல் முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை நிராகரித்தது. அத்துடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டிய நேரத்தை மாநில அரசு முடிவு செய்யலாம் எனக் கூறியது. அத்துடன் அந்த நேரத்துக்கு மாறான நேரத்தில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு மாநிலம் எங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் மத்திய பாஜக அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணன், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தீபாவளிக்கு 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை கண்காணிக்க வீட்டுக்கு வீடு காவல்துறை படைகளை நியமிக்க முடியுமா? மக்கள் உச்சநீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல் அவரவர் விருப்பம் போல் பட்டாசு வெடியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரே உச்சநீதிமன்ற உத்தரவை மீறச் சொன்னது மக்களிடையே கடும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.