’’டிஜிட்டல் பத்திரிகை, நமது வாழ்க்கையின் ஓர் அங்கம்’’- மத்திய அமைச்சர் புகழாரம்.. 

’’டிஜிட்டல் பத்திரிகை, நமது வாழ்க்கையின் ஓர் அங்கம்’’- மத்திய அமைச்சர் புகழாரம்..

’’தேசத்தின் கட்டுமானத்தில் ஊடகம் மற்றும் திரைப்படங்களின் பங்கு’’ என்ற தலைப்பில் டெல்லி பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் பங்கேற்று உரை நிகழ்த்திய  மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி,’’ நெருக்கடியான தருணங்களில் சமூகம், அரசாங்கம், ஊடகம் மற்றும் சினிமா ஆகிய நான்கும் ‘’ ஓருயிர்.. நான்கு உடல்’’ என்ற அர்ப்பணிப்போடு செயல்பட்டு வந்துள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

‘’ உலகம் இப்போது கொரோனா எனும் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டுள்ள நேரத்தில் இந்த நான்கும், அந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும்’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

‘’பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலி மற்றும் டிஜிட்டல் தளங்கள் போன்றவை  நகரம் முதல் கிராமம் வரை தொலை தூரங்களுக்குத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் பாராட்டத்தக்க வகையில் செயலாற்றுகின்றன’’ என்று குறிப்பிட்ட அமைச்சர் நக்வி’’ டிஜிட்டல் பத்திரிகைகள், நமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக இன்று திகழ்கிறது’’ எனப் புகழ்ந்துரைத்தார்.

-பா.பாரதி.