மன்மோகன் சிங்குடன் மத்திய அமைச்சர் திடீர் சந்திப்பு

டில்லி:

மத்திய இணை அமைச்சர் விஜய் கோயல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. முத்தலாக் மசோதாக்கள் உட்பட பல்வேறு மசோதாக்கள் இடம் பெற உள்ளது. லோக்சபாவில் நிறைவேற்ற வேண்டிய 68 மசோதாக்களில் 12 மசோதாக்களும், ராஜ்யசபாவில் நிறைவேற்ற வேண்டிய 40 மசோதாக்களிலும் 12 மசோதாக்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் விஜய் கோயல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். முக்கிய மசோதாக்கள் நிறைவேற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து விஜய் கோயல் கூறுகையில்,‘‘ மழைக்கால கூட்டத்தொடரில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை எழுப்ப நேரம் இல்லை. மசோதாவை நிறைவேற்றுவது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்’’என்றார்.