புதுடெல்லி: ரயில்வே துறையை சிறிதுசிறிதாக தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில, ரயில்வே வாரியத்தை மாற்றியமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.

டிசம்பர் 24ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின்படி, ரயில்வே வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 என்பதிலிருந்து 5ஆக குறைக்கப்படும். ரயில்வேயில் தற்போது இன்ஜினியரிங், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் என்று தனித்தனியாக 8 துறைகள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், இந்தப் புதிய மாற்றத்தின்படி, அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, ‘இந்தியன் ரயில்வே சர்வீஸ்’ என்ற ஒரே துறையின் கீழ் செயல்படவுள்ளன.

முக்கியத் திட்டங்கள் & பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவது, நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.