ஜாமியா மிலியா இஸ்லாமியாவை மிகச் சிறந்த பல்கலைக்கழகமாகத் தேர்வு செய்த மத்திய அரசு கல்வித்துறை

டில்லி

மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்தது என தேர்வு செய்துள்ளது.

மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் நாட்டில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் தரவரிசை எண் அளித்து வருகிறது  அவ்வகையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக 90% மதிப்பெண்  உடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு அடுத்ததாக அருணாசலப்பிரதேசத்தில் உள்ள ராஜிவ் காந்தி பல்கலைக்கழகம் 83% உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 82% மூன்றாம் இடத்தில் உள்ளது  அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 82% உடன் நான்காம் இடத்தில் உள்ளது.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் இதற்கு முன்பு வெளியான தேசிய கல்வி நிலையத் தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தது. இதற்கு முந்தைய வருடம் 12 ஆம் இடத்தில்  இருந்த இந்த பகலிக்கழகம் சற்றே முன்னேறி பத்து இடங்களுக்குள் வந்தது.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் 20க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புக்கள், பட்ட மேற்படிப்புக்கள், பிஎச்டி ஆகியவை அளிக்கப்படுகின்றன, இதைத் தவிரப் பட்டயம், பட்ட மேற்படிப்பு பட்டயம், சான்றிதழ், உள்ளிட்ட பல படிப்புக்கள் பொறியியல், சட்டம், இதழியல், மருந்தகம் ஆகியவற்றில் அளிக்கப்படுகிறது.