மத்திய மாநில அரசுகள் மவுனம்: இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி

நாகை,

மிழக மீனவர்கள் பிரச்சினையில் உறுதியான முடிவு எடுக்காமல்  மத்திய மாநில அரசுகள் மவுனம் காத்து வருவதால் இலங்கை கடற்படையின் அட்டூழியம் மீண்டும்  மீண்டும் தொடர்ந்துகொண்டே வருகிறது.

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 8  மீனவர்களை  இலங்கை கடற்படை கைது மீண்டும் அடாவடியில் ஈடுபட்டு உள்ளது.

பருத்தித்துறை வடபகுதி கடலில் இருந்து சுமார் 15 நாட்டிகல் மைல் தூரத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களான அமிர்தலிங்கம், குமரன், சித்திரவேல், வீரய்யன், மாரியப்பன், அண்ணாதுரை பாலமுருகன், ராஜேஷ் ஆகிய 8 பேரும் வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மீன்பிடி பொருள்கள் மற்றும் படகை சிறைபிடித்து வைத்துள்ளது.

கைது செய்த நாகை மீனவர்களை கடற்கரை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டது.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடரந்து கைது செய்து வரும் சம்பவங்களால் தமிழக மீனவ மக்கள் மத்தியில் அதிர்ச்சி கிளம்பியுள்ளது.

மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் பிரச்சினையில் உறுதியான, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may have missed