மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் வெளியானது..! இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இயின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எண்களை பதிவிட்டு, தேர்வு முடிகளை காணலாம்.

கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு    CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) நடைபெற்றது.  இந்த தேர்வுக்கு விண்ணப்பத்திவர்களில், முதல் தாளில் 12,47,217 பேர் தேர்வு எழுதினர். இரண்டாம் தாளுக்கு 11,04,454 பேரும் தேர்வு எழுதினர்.

இவர்களில் முதலில் தாள் தேர்வில்   4,14,798 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 2வது தாள தேர்வில் 2,39,501 பேரும் தகுதி பெற்றிருப்பதாக சிபிஎஸ் அறிவித்துள்ளது.

தேர்வின் முடிவுகள் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள், தங்களுடன் தேர்வு எண்ணை பதிவிட்டு, தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.