நவம்பர் 30ம் தேதி தமிழகம் வரும் மத்திய குழு: நிவர் பாதிப்புகளை மதிப்பிட ஏற்பாடு

டெல்லி: நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 30ம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகிறது.

 

வரும் திங்கள் கிழமை தமிழகம் வரும் மத்தியக் குழு, டிசம்பர் 1ம் தேதி முதல் நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு பணிகளை மேற்கொள்கிறது. தமிழகத்தில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நவம்பர் 26ம் தேதி நிவர் புயல் கரையைக் கடந்தது.

அதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் சேதங்களைச் சந்தித்தன. இந்நிலையில் நிவர் புயல் பேரிடர் பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்கும் வகையில் சேத மதிப்புகளை கணக்கிட வரும் 30ம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகிறது.

டிசம்பர் 1 முதல் ஆய்வுப் பணிகள் நடைபெறும் என்றும், தமிழத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்தியக் குழு ஆய்வு மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டு உள்ளது.